Monday, 12 September 2011

திபாவளி வெளியீடு - ஓர் அலசல்



      திபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் இரண்டு வார காலம் இருக்கும் இந்நேரத்தில ஓன்றல்ல,இரண்டல்ல.நான்கு படங்கள் இப்போதே தயாராகிவிட்டது. இம்முறை போட்டி விஜய் சூர்யாவுக்கா அல்லது விஷால் தனுசுக்கா என்பது படம் வெளிவந்த பின்னர்தான்  தெரியும். ஆனால் நீங்கள் கண்டிப்பாக சில விமர்சனங்களை படம்  பார்க்கும் முன்பு படிக்க வேண்டும் என்று நான் ஆசைபட்டேன் அதன் விளைவே இந்த பதிவு .. சரி இந்நான்கு படத்தின் மேலோட்ட விமர்சனத்தை பார்த்துவிடுவோம்.

4. வெடி ( பிரபுதேவா ) :
                    
                   விஷால் மற்றும் சமிராரெட்டி நடிக்க பிரபுதேவா இயக்கியுள்ள படம் தான் வெடி...முதலில் நினனத்துகூட பார்க்க முடியாத விஷயம் நாயகன் நாயகி காதல் காட்சிகள் ( அம்மாடியோவ் )..இவர்கள் இருவருக்கும் துளிகூட கெமிஸ்ட்ரி ஒத்துப்போகாது ... அதனால் படம் பார்க்க நினனப்போர்க்கு ஒரு எச்சரிக்கை.. இந்த படத்திலும் சில ப்ளஸ் இருப்பதால் யோசித்து பார்க்கலாம்..அது தான் பிரதேவா சார். அதன் பிறகு சொல்லும்படி ஒன்னுமில்லை.. இன்னொரு செய்திங்ணா ...இந்த படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுவது உறுதியாகிவிட்டது.. ( அவ்வ்வ்வ்வ்வ்வ்...)
                                       இயக்குனர்         ;             பிரபுதேவா
                                       இசை            ;             விஜய ஆன்டனி
                                       எடிட்டர்            ;             வி.டி.விஜயன்
                                       எழுத்து            ;             சிவா
                                       மார்க்கெட்டிங்     ;             சன் பிக்சர்ஸ்
          இந்த படத்தில் இசையமைப்பாளாரான தேவி ஸ்ரி பிரசாத் நடன இயக்குனரான ஸோபி இருவரும் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்களாம்.. இப்படத்தில் தாமரை இரண்டு பாடலகளும் ....கபிலன் , நா.முத்துகுமார , வாலி ஆகியோர் ஒரு பாடலையும் எழுதியுள்ளனர்…..விஜய ஆன்டனி “இச்சு இச்சு” பாடலை பாடியுள்ளார்....படத்தின் பாடல்கள் ஓகே ரகத்தில் உள்ளதால் கேட்கலாம்…….வெடி வெடிக்குமா...?... கண்டிப்பாக சன்டீவியில் வெடிக்கப்போகுது ட்ரைலராய்  ( இப்பவே கண்ணகட்டுதா..ஹி..ஹி.. )

3. மயக்கம் என்ன..!!! (செல்வராகவன் ) :
         இப்படத்தில் தனுசுடன் ஜோடி சேரப்போகும் அந்த கதாநாயாகி தமிழுக்கு புதுவரவு ( ரிச்சா கங்கோபதி ) ...இவர் தெலுங்கில் மூன்று படங்கள் நடித்துவிட்டார்...இவர் சிம்புவுடன் ஒஸ்தியிலும் நடித்துவருகிறார் ( சிம்பு பெயர் பதியும்போது கடுப்பேறியது குறிப்பிடதக்கது...ஸ்ஸ்ஸ்ஸ்...)... இக்காவியத்தின் இசை விரைவில் வெளிவரவுள்ளது...இதில் தனுஸ் அண்ணா இரண்டு பாடல்கலை எழுதியுள்ளார்...பாடலின் முதல் வரிகள் பின்வருமாறு( ஓட ஓட தூரம் குறையல .....என்னென்ன செய்தோம் இங்கு..) செல்வராகவன் சைக்கோவும் ஓரு பாடலை எழுதி கிழித்துள்ளார் ( நான் சொன்னதும் மழை வந்துச்சா..)…. படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்.... ...வரிகள் எப்படியோ வளர்ந்துவரும் இசையமைப்பாளாரான ஜீ.வீ.பிரகாஸ் இசையில் பாடல்களை கேட்க ஆர்வமாக உள்ளேன்...விரைவில் ரிலிஸ் பண்ணுங்கோ சாமியோவ்....
                                          கேஸ்ட் & க்ரு
                                     இயக்குனர்      :   செல்வராகவன்
                                     இசை          :  ஜீ.வீ.பிரகாஸ்
                                     எடிட்டர்         :   கோலா பாஸ்கர்
                                     எழுத்து        :  செல்வராகவன்
                                     மார்க்கெட்டிங்    ;  ஜெமினி பிலிம் சர்க்யுட்
              
        இப்படத்தில் இவர்களோடு சுந்தர் ராமு , பூஜா பாலு , மதிவாணன் ராஜேந்திரன ,ரவி பிரகாஸ் , ராஜிவ் ஆகியோர் நடித்துள்ளனர்.. படத்தின் ப்ளஸ் சைக்கோராகாவன்..ஜெமினி பிலிம் சர்க்யுட்...தனுஸ் அண்ணா ….. படம் எப்படியோ திபாவளிக்கு என்னுடைய ப்ளேனில் இருக்கும் இரண்டாவது படம் இதுதாங்ணா...

2. ஏழாம் அறிவு..( ஏ.ஆர்.முருகதாஸ் ) :

    அப்பாடாக்கர் சூர்யா நடிக்க .ஆர்.முருகதாஸ் இயக்கும் படம்தான்ங்க இந்த ஏழாம் அறிவு..(சூர்யா ரசிகர்கள் மன்னிக்க...)சிறிது காலத்திலேயே மிகப்பெரிய இயக்குனராய் வலம் வ்ரும் .ஆர்.முருகதாஸ் சாருக்கு வாழ்த்துக்கள் ...உண்மையிலேயே இந்த படத்தின மிகப்பெரிய ப்ளஸ் இயக்குனரய்யா தானுங்கோவ்………………………..இப்படத்தை நான் பார்க்ககூடதென்று சபதம் எடுத்துள்ளேன்………காரணம் அப்பாடாக்கர் சூர்யாவே தான்.. சரியான பந்தா பார்ட்டி….. . (மன்னிக்க...) ...ம்ம்ம்....ம்...இதற்க்கு மேல் என்னால முடியலைடா சாமி....

                                                     கேஸ்ட் & க்ரு
                                                 இயக்குனர்      :   ஏ.ஆர்.முருகதாஸ்
                                                 இசை            :   ஹாரிஸ் ஜெயராஜ்
                                                 எடிட்டர்           :      ஆன்டனி
                                                 எழுத்து          :   ஏ.ஆர்.முருகதாஸ்
                                                 மார்க்கெட்டிங்   :    ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பாடல்கள் 22ம் தேதி வெளிவரவுள்ளது.... இவ்வளவுதான் எனக்கு தெரியும் ...சத்தியமா இவன பற்றி எனக்கு ஒன்னும் தெரியாது...( அவ்வ்வ்வ்வ்...)

1.வேலாயுதம் ( ஜெயம்.ராஜா ) :

        நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் இதுதான் .... படத்தின் ப்ளஸ் விஜய் ரசிகர்கள் தான்... மங்காத்தாவின் வெற்றியை அஜித் ரசிகர்கள் கொண்டாடியது போல விஜய் ரசிகர்கள் இர்ண்டு மடங்கு கொண்டாட காத்திருப்பது சத்தியமான உண்மை... இன்னும் நான் ட்ரைலைரை கூட பார்க்கலை.....பாடல்கள் மட்டும் கேட்டாச்சு....டாப் ட்க்கரு...அதிலும் முளைச்சு மூனு இலை சாங்கும் சொன்னா புரியாது சாங்கும் ....ம்ம்ம்ம்....ம்ம்ம்ம்....ரொம்ப நன்னாருக்கு... பேஸ்...பேஸ்...விஜய் ஆன்டனியின் அசல் வெற்றி... பாட்டை கேட்காத நண்பர்கள் கண்டிப்பாக கேட்கவும்.... விஜய் ரசிகர்களின் முன்னிலையில் இப்படத்தை ஆரம்பித்தும் ...அவர்களையே இசையை வெளியிட வைத்தும்..ரசிகர்க்ளை சந்தோஸப்படுத்தியுள்ளனர் இந்த வேலாயுதம் டீம் ...


                

                                                            கேஸ்ட் & க்ரு                 
                                                இயக்குனர்      :     ஜெயம்.ராஜா
                                                இசை            :     விஜய ஆன்டனி
                                                எடிட்டர்           :           வி.டி.விஜயன்
                                                எழுத்து          :     ஜெயம்.ராஜா
                                                மார்க்கெட்டிங்   :          ஆஸ்கார் பிலிம்ஸ்

          சந்தானம் ,சத்யன் , பாண்டியராஜன் , எம்.எஸ்.பாஸ்கர்.... இப்படித்தில் மேலும் ஒரு நகைச்சுவை பட்டாளம் இருக்குது... ஹாட் ஸ்பாட் - இப்படத்தில் பாலத்தின்மேல் ஓடும் ரயிலில் சண்டை காட்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது (இதுவரை யாரும் முயற்சி செய்யாத ஒரு காட்சி ) ... பாடல் மற்றும் இந்த சண்டை காட்சி தான்.. என்னுடைய தனிப்பட்ட ஆவலுக்கு காரணம்... ஆக மொத்தம் நான் முதலில் பார்க்க நினனக்கும் படம் இதுதான் ...

எப்பவுமே தலயும் ஜெயிக்கனும்...தளபதியும் ஜெயிக்கனும்....அவ்வளவுதான் எனக்கு வேணும்....
                                           
                               சும்மா அதிருதுல்ல...